search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய சுற்றுச்சூழல் மந்திரி"

    • காற்று மாசுப்பாடு இல்லாத 9 நகரங்களுக்கு விருது வழங்கப்படும்.
    • சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்வியல் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

    75வது ஆண்டு சுதந்திர கொண்டாட்ட அமுத பெருவிழாவின் ஒரு பகுதியாக டெல்லியில் சுத்தமான காற்று குறித்த சர்வதேச கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசிய மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பூபேந்திர யாதவ் கூறியுள்ளதாவது:

    பிரதமர் மோடியின் சீரிய தலைமையின் கீழ் காற்று மாசுபாடு மற்றும் பருவநிலை மாறுபாடு குறித்த சவால்கள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டு வருகின்றன. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்க முனைப்பான நடவடிக்கைகள், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரித்தல், தொழிற்சாலை கழிவுகளை சுத்திகரித்தல், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்த்தல் உள்ளிட்டவற்றில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.

    கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் மோடியால் அறிமுகப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்வியல் முறை என்ற இயக்கம், கழிவுகளை மதிப்புமிக்க பொருட்களாக மாற்றுவதற்கு அடித்தளம் அமைத்திருப்பதுடன், கணிசமாக கழிவுகளைக் குறைக்கும் யுத்திகளையும் கற்றுத்தருகிறது.

    நீடித்த உற்பத்தி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்வியல் முறையை மக்களிடையே கொண்டு செல்வது, பருவநிலை மாறுபாடு, காற்று மாசுபாடு பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும். இதனை முன்னிறுத்தும் வகையில், தேசிய அளவில் காற்று மாசுப்பாடு இல்லாத நகரம் என்ற விருது 9 நகரங்களுக்கு வழங்கப்படும். இந்த விருதுடன் 5 கோடி ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ஸ்டெர்லைட் ஆலை பற்றி ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருப்பதாக மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி ஹர்ஷ வர்தன் கூறினார். #SterliteProtest #Thoothukudi
    புதுடெல்லி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் மற்றும் துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி மத்திய மந்திரி ஹர்ஷ வர்தனிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் பற்றிய தகவல்களை பத்திரிகைகள் மூலம் அறிந்தேன். 13 பேர் பலியாகி இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையின் செயல்பாடு குறித்து விரிவாக ஆய்வு செய்து, முழுமையான தகவல்களை திரட்டி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறேன். இந்த ஆலை இயங்குவதற்கான அனுமதி முந்தைய மத்திய அரசால் வழங்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு ஹர்ஷ வர்தன் கூறினார்.

    அப்போது அவருடன் இருந்த அதிகாரிகள் கூறுகையில், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அறிக்கை கேட்டு இருப்பதாகவும், அதன்படி மாசு கட்டுப்பாட்டு வாரியம் அளிக்கும் தகவல்கள் முக்கியமானதாக இருக்கும் என்றும் தெரிவித்தனர்.  #SterliteProtest #Thoothukudi  #EnvironmentMinister #HarshVardhan
    ×